டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெறும் அபாரமான வெற்றிகளுக்கு இதுவே காரணம் – ஸ்வான் புகழாரம்

Ind-1
- Advertisement -

சமீப காலமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சரி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சரி அசத்தி விட்டனர். அதனை தாண்டி உச்சகட்டமாக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக இந்தியா கைப்பற்றியது.

indvsaus

- Advertisement -

இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். இதன் காரணமாகத்தான் விராட் கோலியின் அணி அதிகபட்சமாக வெற்றிகளை குவித்து உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பற்றி பாராட்டிப் பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கிரேம் ஸ்வான். அவர் கூறுகையில்…

தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக உற்பத்தி செய்துள்ளது. இந்திய அணி. ஜஸ்பிரித் பும்ரா போன்ற அதிக திறமை வைக்க வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்.

IND-bowlers

சென்ற வருடம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது இஷாந்த் ஷர்மா, முகமது சமி, மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மொத்தம் 40 விக்கெட்டுகளில் 33 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாகத்தான் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.

இந்திய அணி அபாரமாக விளையாட தொங்க விட்டது என்று கூறியுள்ளார் கிரேம் ஸ்வான். விராட் கோலி தலைமை ஏற்ற பின்னர் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ,இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆக்ரோசமாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement