டெல்லி அணியின் இளம்வீரரான இவர் அப்படியே சேவாக் மாதிரி ஆடுகிறார் – க்ரீம் ஸ்வான் புகழாரம்

Swann
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய டெல்லியில் தற்போது வரை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. எந்த இடத்திலும் பெரிய அணிகளையும் எதிர்த்து சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது. அதே நேரத்தில் டெல்லி அணியில் இளம் வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

dc

- Advertisement -

ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் என பேட்டிங்கில் பட்டையை கிளப்புகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஷிகர் தவான் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அணியில் உள்ளனர்
இதில் பிருதிவி ஷா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். அவரின் பேட்டிங் கடந்த 4 போட்டிகளில் சரியில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் : அவருடைய பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது. குட்டி சேவாக் போன்று இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

Shaw-1

இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் வீரேந்திர சேவாக். அவரைத்தான் ப்ரித்வி ஷா தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் ஞாபகப்படுத்துகிறார். அதே நேரத்தில் டெல்லி அணியை ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார். ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் டெல்லி அணிக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய பலம்.

shaw

என்னை பொறுத்தவரையில் டெல்லி அணி ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் பலம் பொருந்திய ஒரு முழு ஆக்ரோசமான அணியாக தான் பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கிரேம் ஸ்வான்.

Advertisement