கோலி அமைத்த இந்த வியூகம் மற்றும் அவரது யோசனைதான் எளிதான வெற்றிக்கு காரணம் – க்ரீம் ஸ்வான் புகழாரம்

Swann
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை கதிகலங்க செய்யதனர். முதல் இன்னிங்ஸ்ஸில் இருந்தே இந்திய ஸ்பின்னர்ஸ்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களும்,பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களும் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

சிறப்பாக பந்துவீசிய அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளும், ரவி அஸ்வின் 7 விக்கெட்டுகளும் என இருவரும் இணைந்து 2 இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்த 20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகளை இவர்களே எடுத்தனர். பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் செய்யாமல் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்ததே தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்ற தற்பொழுது பேச்சு எழுந்துள்ளது.

அதே போல இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களம் இறங்கிய வேளையில் இங்கிலாந்து அணி ஒரே ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியது தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ரவி அஸ்வின் 2ஆம்இடம் பிடித்துள்ளார்.இந்திய அளவில் மிக வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

IND

மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட அக்ஷர் பட்டேல் இரண்டு இன்னிங்ஸிலும் இரண்டு 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார் . அநத போல் ஒரு பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை ( 11 விக்கெட்டுகள் ) வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீரர் க்ரீம் ஸ்வான் தன் கருத்துகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Stokes

விராட் கோலி ஆரம்பம் முதலே ஸ்பின்னர்ஸ்களுக்கு ஏற்றவகையில் சிறப்பான ஃபீல்ட்டிங்கை நாலா பக்கமும் அமைத்திருந்தார். ஸிலிப் , கவர் , லாங் ஆன் என அனைத்து திசையிலும் பம்பரமாக நின்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கோலியின் வியூகம் சரியாக அமைந்தது. இந்தியாவிற்கு எனது பாராட்டுக்கள் என்று பாராட்டு தெரிவித்தார்.

Advertisement