கோலியை வீழ்த்தவும், இந்திய அணியை தோற்கடிக்கவும் இது மட்டுமே ஒரே வழி – க்ரீம் ஸ்வான் யோசனை

Swann
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

IND-1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் இந்திய அணியை வீழ்த்துவது குறித்தும், கோலியை ஆட்டமிழக்கச் செய்வது குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் ஆடுகளங்கள் தட்டையானவை என்பதனால் சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் முழுவதுமாக ஒத்துழைக்கும்.

kohli 1

இந்தியாவுக்கு எதிராக நன்றாக கட்டுக்கோப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினால் இந்திய அணியினரை வீழ்த்தமுடியும். இந்திய அணியில் தற்போது விரேந்திர சேவாக் இல்லை கோலி தான் இருக்கிறார். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது மோசமான பந்து வரும்வரை கோலி காத்திருப்பார். மேலும் இந்திய அணியும் மிக மிக பொறுமையானது அதேபோன்று இங்கிலாந்து அணியும் பொறுமையை கடைபிடித்து ஒரு நாள் முழுவதும் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை தோற்கடிக்க முடியும். இதற்கு இங்கிலாந்து வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

kohli 5

எவ்வளவு நேரம் பந்து வீசினாலும் சரி அதை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளாமல் ஸ்டம்பை நோக்கி வீசுவது, மிடில் ஸ்டம்ப் இலிருந்து லெக் திசையில் வீசுவது என தொடர்ந்து பந்துவீசினாலே போதுமானது. அவ்வாறு பொறுமையுடன் பந்து வீசினால் நிச்சயம் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது மட்டுமின்றி இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். மேலும் இந்திய அணிக்கு எதிராக இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் எனவும் ஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement