டிவில்லியர்ஸ் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து இவங்க 2 பேரும் தெ.ஆ அணிக்காக விளையாடுவாங்க – கிரீம் ஸ்மித் உறுதி

Smith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடுவார் என்று பேச்சு ஏற்கனவே கடந்த ஆண்டிலிருந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் அணியின் பயிற்சியாளரான பவுச்சரும் இதுகுறித்து ஏ.பி.டிவில்லியர்ஸிடம் பேசியுள்ளதாகவும் அவர் ஐபிஎல் தொடர் முடிந்து தனது முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

abd1

- Advertisement -

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குனரான கிரீம் ஸ்மித் ஏபிடி சர்வதேச வருகை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்டு மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அதில் டிவிலியர்ஸ் மட்டுமின்றி தாஹீர், கிரிஸ் மோரிஸ் ஆகியோர் அணியில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது என பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக ஏ.பி.டி உடன் சேர்ந்து மோரிஸ் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோருக்கும் இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இந்த செய்தி ஏபி டிவில்லியர்ஸ் இன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Boucher

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இதுவரை தனது அதிரடியால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஏ.பி.டி நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும் என்ற காரணத்தினாலும் தென் ஆப்பிரிக்கா டி20 உலகக் கோப்பையை வெற்றி பெறும்வரை அவர் தொடர வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த வேளையில் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனரான கிரீம் ஸ்மித் ஏபிடி தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Abd

ஏற்கனவே ஐபிஎல் தொடர் துவங்கும் முன்னர் எனக்கு மீண்டும் தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கிடைத்தால் நான் என்னுடைய உடற்பகுதி மற்றும் பார்ம் ஆகியவற்றை பொறுத்து என்னுடைய விளையாடும் முடிவை அறிவிப்பேன் என்று ஏபி டிவிலியர்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் ஏபிடி மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடுவது தற்போது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement