குறையில்லாத தங்கமா கேப்டன்ஷிப் செய்றாரு, அதுல மட்டும் முன்னேறுனா போதும் – ரோஹித் சர்மாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

TEam India Rohit Sharma
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியாவின் தோல்விக்கு டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டு சுமாராக கேப்டன்ஷிப் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏமாற்றமடைந்துள்ள பெரும்பாலான ரசிகர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Rohit

- Advertisement -

ஏனெனில் இருதரப்பு தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்ற போதிலும் உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்ட காரணத்தால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவரது தலைமையில் வழக்கம் போல இரு தரப்பு தொடர்களில் வென்ற இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் மண்ணை கவ்விய நிலையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் கொஞ்சம் கூட போராடாமல் படுதோல்வியை சந்தித்தது.

சிறப்பான கேப்டன்ஷிப்:
அதை விட சுமாரான ஃபிட்னஸை கடைபிடிக்கும் அவர் அடிக்கடி காயம் மற்றும் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதுடன் ஹிட்மேன் என்று ரசிகர்கள் அழைப்பதற்கேற்றார் போல் செயல்படாமல் சமீப காலங்களாகவே சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கடந்த 4 – 5 வருடங்களாகவே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார். அதன் காரணமாக நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வரும் டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Rohit Sharma 2

மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் புதிய அணியை உருவாக்கும் வேலையை துவக்கியுள்ள பிசிசிஐ 2023 உலகக்கோப்பையை வெல்ல தவறும் பட்சத்தில் ஒருநாள் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கேப்டன்ஷிப் செய்வதில் ரோகித் சர்மாவிடம் எந்த தடுமாற்றமும் இல்லை என்று தெரிவிக்கும் முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் அவர் பேட்டிங்கில் அசத்தினால் தாமாகவே இந்தியா வெற்றி பாதைக்கு திரும்பும் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில் உங்களுடைய சொந்த செயல்பாடுகளாகும். ஒரு கேப்டன் சந்திக்க வேண்டிய அழுத்தம் எப்போதும் தூரம் செல்லாது. எனவே தற்போதைக்கு ரோஹித் சற்று புத்துணர்ச்சியடைய வேண்டிய நிலையில் உள்ளார். அவருடைய சொந்த பார்ம் தொடர்ச்சியாக இருப்பதில்லை. குறிப்பாக சமீப கால ஐபிஎல் தொடர்களிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் அசத்தவில்லை. எனவே அதை சரி செய்தால் நிறைய அம்சங்கள் சாதகமாக மாறும்”

Graeme-Smith

“அத்துடன் இங்கு யாரும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சிக்கவில்லை. மாறாக அவருடைய சொந்த செயல்பாடுகள் தான் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எனவே தம்முடைய பெயருக்கு கீழ் அவர் நல்ல ரன்களை கொண்டு வந்தால் நிறைய அழுத்தங்கள் தாமாக சென்று விடும்” என்று கூறினார். இருப்பினும் 36 வயதை கடந்து விட்ட அவருக்கு பதிலாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டன் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேனை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க:இவரே கேப்டன் பதவியிலிருந்து தூக்குவாரம், அப்றம் இவரே இல்லனு சொல்வாரம் – கங்குலியை விளாசிய முன்னாள் பாக் வீரர்

குறிப்பாக 3 வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் 2023 ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் யசஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்து நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement