NZ vs RSA : வில்லியம்சன் சதமடித்து இருந்தாலும் உண்மையான ஆட்டநாயகன் இவரே

nz
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதின.

nz vs sa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்த சதமடித்து வழிவகுத்த வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு எடுக்கப்பட்டாலும் உண்மையான ஆட்ட நாயகன் யார் என்றால் நியூசிலாந்து அணியில் கிராண்ட் ஹோம் தான். ஏனெனில் முதல் பந்துவீசிய நியூஸிலாந்து அணியில் கிராண்ட்ஹோம் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார். இதுவே தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது.

grandhomme

மேலும் 137 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி தத்தளித்தபோது பேட்டிங்கில் 47 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வில்லியம்சன் உடன் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தார். இதுவே நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இந்த ஆட்டநாயகன் விருதினை கிராண்ட்ஹோம் பெற்றிருக்கவேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement