- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை வீழ்த்தி டி20 உலககோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் – கிரீம் ஸ்மித் கருத்து

2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி இந்த அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் : கிரீம் ஸ்மித்

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகிவிட்டன. அதனை தொடர்ந்து இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட முதன்மை அணியை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நடப்பு சாம்பியனான இந்திய அணியும் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துவிட்டது.

- Advertisement -

இம்முறையும் இந்திய அணி பலமான அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று தான் விரும்புவதாக தெனாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்முறை இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது கடினம் என்று நாங்கள் அறிவோம். ஆனாலும் அண்மையில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை மிகச் சிறப்பான அணியாக அவர்கள் இருந்தாலும் தற்போது இந்திய அணியில் உள்ள ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் அளவிற்கு தென்னாப்பிரிக்க அணியிடம் போதுமான தரம் உள்ளது. எனவே டி20 உலக கோப்பையை வெல்லும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : எங்க காசுல இந்தியாவையே எதிர்க்குறீங்களா? வங்கதேச வீரர்களுக்கு ஆப்படிக்க தயாராகும் இந்திய நிறுவனம்?

இந்திய அணியை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. அதிலும் சொந்த மண்ணில் நடைபெறும் கோப்பை என்பதனால் அவர்கள் பலமான அணியாகவே இருப்பார்கள். ஆனாலும் அவர்களை வீழ்த்தி கோப்பையை தென்னாப்பிரிக்க அணி தான் வெல்ல வேண்டும் என்று விரும்புவதாக கிரீம் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -