தனது குழந்தைகளின் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு போஸ்கொடுத்த – தெ.ஆ வீரர்

Graeme-Smith

தென்னாப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர் கிரீம் ஸ்மித் இவரின் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான பல வெற்றிகளை குவித்தது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை தலைநிமிர செய்ததும் இவரது தலைமையில்தான். கிரீம் ஸ்மித் இதுவரை தென்ஆப்பிரிக்கா அணி 117 டெஸ்ட் போட்டிகளிலும், 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானவர் 2014 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு ஸ்மித் அயர்லாந்தை சேர்ந்த பாப் சிங்கர் மோர்கன் டேனே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த ஜோடிக்கு 2 மகன்கள் உள்ளனர் திருமணம் ஆனால் சில வருடங்களில் தனது உறவை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார்.

அதன்பிறகு தற்போது நவம்பர் 2 ஆம் தேதி ரோமி லேன்பிரான்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஸ்மித் தனது திருமணத்தை குழந்தைகளின் முன்னிலையில் அவர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக செய்து கொண்டார். மேலும் தனது கல்யாண புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஸ்மித் நவம்பர் இரண்டாம் தேதி நம்ப முடியாத நாள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.