இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு தற்போது மீண்டும் காதல் பறவைகளாக சுற்றித்திரிந்த இந்த ஜோடிக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது.
தற்போது அனுஷ்கா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது மற்றும் தற்போது கருவுற்றிருப்பது என அனைத்தும் உலகம் அறிந்த விடயங்கள் தான். இந்நிலையில் தற்போது கூகுளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் மனைவி யாரென தேடினால் அதற்கு பதிலாக அனுஷ்கா சர்மாவின் பெயரை கூகுள் காட்டுகிறது.
அத்துடன் அனுஷ்கா சர்மாவின் சில புகைப்படங்களையும் கூகுள் பிரதிபலிக்கிறது இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அனுஷ்கா சர்மாவின் கூகுள் ப்ரோபைல் முடியும் இடத்திலும் ரஷீத் கான் குறித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதில் ரஷித் கான் திருமணம் ஆனவர் என்றும் அவரது மனைவியின் பெயர் அனுஷ்கா சர்மா என்றும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் இவை அனைத்துமே முற்றிலும் பொய்யான தகவல் மேலும் ரசித் கான் திருமண தேதியும், கோலி அனுஷ்கா சர்மாவின் திருமண தேதியும் ஒரே தேதியாக காண்பிக்கிறது. இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது.
ஏனெனில் தற்போது வரை ரஷீத் கானுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவருக்கு தற்போது தான் 22 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷீத் கான் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.