Worldcup : உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு கூகுள் நிறுவனம் செய்த மரியாதை பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து

Worldcup
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

- Advertisement -

பொதுவாக தற்போது எந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றாலும் அதற்காக கூகுள் நிறுவனம் தனது வலைதள முகப்பில் அந்த நிகழ்விற்கு சம்பந்தப்பட்ட டூடுல் என்கிற ஒரு சின்னத்தை முகப்பில் வைக்கும். அதன்படி இன்று இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற 10 அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இன்று தனது முகப்பில் செட் செய்துள்ள டூடுல் இதோ :

worldcup 2

இந்த டூடுல் இந்த உலகக்கோப்பை தொடரினை சிறப்பிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு சிறிய GIF வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் உங்கள் மொபைல் போனில் கூகுள் வலைதள முகப்பில் எளிதாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement