என்னுடைய 563 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்கப்போவது அவர்தான் – கிளென் மெக்ராத் பாராட்டு

Mcgrath
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் கடந்த 1993-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2007-ஆம் ஆண்டு வரை 250 நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி 381 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதேபோன்று இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவங்களிலும் பங்கேற்று பல்வேறு வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

- Advertisement -

அதோடு ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது 53 வயதாகும் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ச்சியாக கிரிக்கெட் சார்ந்த பணிகளையே செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தனது மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்ததன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பிங்க் டெஸ்ட் என்ற போட்டியின் மூலம் நிதி திரட்டி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவானான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 563 விக்கெட்டுகளை முறியடிக்கப்போகும் வீரர் குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : நாதன் லயன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் அவரால் பல சாதனைகளை முறியடிக்க முடியும். என்னை பொறுத்தவரை சாதனைகள் என்பது முறியடிக்க படுவதற்காக தான் உள்ளன. நவீன கிரிக்கெட்டில் தற்போது நாதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : என்ன தான் சொன்னாலும்.. அந்த ரெண்டுலயும் நம்ம இந்திய அணி ரொம்ப ஓவர் ரேட்டட்.. ஸ்ரீகாந்த்

அவரது வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கிறது. நிச்சயம் அவர் என் சாதனையை முறியடித்தால் எனக்கு பெருமையாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள நாதன் லயன் 505 விக்கெடுகளை வீழ்த்தியுள்ள வேளையில் இன்னும் மெக்ராத்தின் சாதனையை முறியடிக்க அவருக்கு 58 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement