சச்சினை விட இவருக்கு பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம் – மனம் திறந்த மெக்ராத்

mcgrath
- Advertisement -

ஆஸ்திரேலிய ஜாம்பவான் 50 வயதான கிளன் மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து காலகட்டத்திலும் சிறந்த பவுலரான இவர் உலக அளவிலும் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் முக்கிய வீரர் ஆவார். இவர் ஆடிய காலத்தில் இவர் ஒரு ஈடு இணையில்லா வீரர் என்பதே உண்மை.

Glenn-McGrath

- Advertisement -

தனது காலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆக இருந்த பேட்ஸ்மேன்களுக்கெல்லாம் தனது சாமர்த்தியமான பந்து வீச்சினால் தண்ணி காட்டியவர். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலிய தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவதை விட பிரையன் லாராவிற்கு மிகவும் கடினமான வேலை என்று கூறியுள்ளார். மேலும், தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் முழுமையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தான் என்று கூறியுள்ளார்.

lara

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய 3 வீரர்களை வீழ்த்த ஆசைப்படுவேன் என்று கூறினார். இது போன்ற பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மேலும் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி என்றாலும் கூட நான் மன்காட் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்.

Advertisement