டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – மெக்ராத் கணிப்பு

McGrath
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரானது தற்போது அரையிறுதி சுற்றினை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகளில் நான்கு அணிகளாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் 2 அணிகள் : மெக்ராத் கணிப்பு

இதில் நாளை மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணியும், அதன் பிறகு மார்ச் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத இருக்கின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மார்ச் 8-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு செல்லப்போகும் இரண்டு அணிகள் எது? என்பது குறித்த கணிப்புகளை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் இறுதிப் போட்டிக்கு செல்லப்போகும் இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து ஒரு ஆபத்தான அணி. அதனால் அவர்களுக்கு எதிராக இந்திய அணி கவனமாக விளையாட வேண்டியது அவசியம். ஏனெனில் போட்டி நாள் அன்று அவர்களுக்கு சாதகமாக ஆட்டம் க்ளிக் ஆகிவிட்டால் எதையும் செய்யக் கூடியவர்கள். எனவே இங்கிலாந்து அணியை மிகவும் உஷாராக எதிர்கொள்ள வேண்டும். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அடிச்சி சொல்றேன் இந்தியா டி20 உலககோப்பையை ஜெயிக்காது.. இதுதான் காரணம் – முகமது ஆமீர் கருத்து

அதேபோன்று தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. எனவே இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தான் தகுதி பெறும் என்று கிளென் மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement