துபாயில் சாதகம்ன்னு சொல்லாதீங்க.. தரமான இந்தியாவுக்கு தெரிஞ்ச இதை மத்தவங்க மறந்துட்டாங்க.. மெக்ராத் பதிலடி

Glenn McGrath
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. ஆனால் அந்தத் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை முழுமையாக துபாயில் விளையாடும் என்று ஐசிசி ஆரம்பத்திலேயே அறிவித்தது.

அப்போது அது பற்றி யாருமே எதுவும் பேசவில்லை. ஆனால் துபாயில் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதிப் பெற்றதும் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய சாதகம் என்று நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

இதெல்லாம் சாதகமா:

மேலும் ஆண்டி ராபர்ட்ஸ், பட் கமின்ஸ், டேவிட் மில்லர் போன்ற நிறைய முன்னாள் இன்னாள் வீரர்களும் இந்தியாவுக்கு துபாயில் சாதகம் இருப்பதாக விமர்சித்தனர். இந்நிலையில் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறும் மந்திரத்தை பெரும்பாலான அணிகள் தவற விட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். ஆனால் இப்போதும் அதை சரியாகப் பின்பற்றி இந்தியா வென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்திய அணிக்கு எந்த சாதகமும் இல்லை என்று தெரிவிக்கும் மெக்ராத் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இனிமேலும் பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது. எனவே அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடுவது மட்டுமே ஒரே வழி. அங்கே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடிய இந்தியாவை நீங்கள் பாராட்ட வேண்டும். சுழலுக்கு சாதகமான மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது அவர்களுக்குத் தெரியும்”

- Advertisement -

மெக்ராத் பதிலடி:

“அவர்களுக்கு நியாயமற்ற சாதகம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. இது இந்தியா இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் விளையாடும் போது சாதகம் இருப்பதாக சொல்வதைப் போல் இருக்கிறது. இந்தியாவின் ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான விஷயத்தைக் கொண்டுள்ளது”

இதையும் படிங்க: அது உலகிற்கு அப்பாற்பட்ட கேப்டன்ஷி.. 2023இல் தன்னை அவுட்டாக்கிய தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் பற்றி வெங்கடேஷ்

“இந்தியா தங்களது விளையாட்டை நன்றாகத் தெரிந்து தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவது முக்கியம். அதே சமயம் ஒருநாள் போட்டிகளையும், உலகக் கோப்பையைக் காப்பாற்றுவதும் முக்கியம். இந்தியா தங்களது ஒருநாள் போட்டிகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அப்படிப்பட்ட இந்திய அணியை தாண்டி சிறப்பாக விளையாடி வெல்வது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். இந்தியாவுக்கு சவால் விடுக்கப்படுவதை நான் விரும்புகிறேன். ஆனால் இந்தியா தரமான அணி” என்று கூறினார்.

Advertisement