
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் அத்தொடரில் மற்ற பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்து அவருக்கு கை கொடுக்கவில்லை. அதனால் அவர்களுக்கும் சேர்த்து முழுமூச்சுடன் பௌலிங் செய்த பும்ரா கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடாத அவர் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 30 வயதை தொட்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா இனிமேலும் இளம் வீரர் கிடையாது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். மேலும் தனித்துவமான பவுலிங் ஆக்சன் கொண்டிருக்கும் பும்ரா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி தன் மீது அதிகப் பாரத்தை போடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதுவே காயத்தை சந்திப்பதற்கு காரணமாக அமைவதாகவும் மெக்ராத் கூறியுள்ளார்.
எனவே பும்ரா முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாடி புத்திசாலித்தனமாக தனது பணிச்சுமையை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மற்ற பவுலர்களை விட பும்ரா தனது உடலில் அதிகமான அழுத்தத்தைப் போடுகிறார். இதுவரை அதை சரி செய்வதற்கான வழியை அவரால் கண்டறிய முடிந்தது”
“துரதிஷ்டவசமாக அனைத்து நேரங்களிலும் அவரால் அது முடியாது. இதற்கு முன் காயத்திலிருந்து அவர் கம்பேக் கொடுத்துள்ளார். அதே போல தற்போது மீண்டும் எப்போது விளையாட முடியும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இனிமேலும் அவர் இதற்கு முன்பிருந்த இளமையுடன் இருக்கப் போவதில்லை. எனவே அவர் தாம் என்ன செய்கிறோம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இதுமட்டும் தான் ஒரேவழி.. மிகப்பெரிய வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் – இஷான் கிஷன்
“களத்திற்கு வெளியே அவர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளராக இருப்பது ஒரு காரை ஓட்டுவதைப் போன்றது. அதற்கு சரியான எரிபொருளை நிரப்பவில்லை என்றால் அது விரைவில் அல்லது பின்னர் தீர்ந்து விடும். என்னுடைய எரிபொருள் தொட்டி ஜஸ்ப்ரித் பும்ராவை பெரியதாக இருந்தது. ஏனெனில் அவரை விட நான் வேகமாக பௌலிங் செய்யவில்லை. அவரைப் போன்ற வீரர்கள் எது தங்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் என்பதை அறிவார்கள். இந்தியா அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் பும்ரா தேவைப்படக்கூடியவர்” என்று கூறினார்.