இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இவரின் கீழ் இந்த அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த மேக்ஸ்வெல்

Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பல கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் அதிரடியாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. சென்ற ஆண்டு 11 போட்டிகளில் பங்கெடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தார் மேலும் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 101.89 மற்றும் ஆவரேஜ் 15.43 என்று மிகவும் மோசமாக செயல்பட்ட கிளென் மேக்ஸ்வெலை பஞ்சாப் அணி தனது அணியிலிருந்து இந்தாண்டு விடுவித்தது.

maxwell 1

இவரின் மோசமான செயல்பட்டால் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் விமர்சித்தனர். குறிப்பாக சேவாக் இவர் இந்தியாவுக்கு குளிர்பானங்கள் குடிப்பதை மட்டுமே குடிக்க வருகிறார் என்றும் விளையாட வரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு பலர் தங்களது ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10.75 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் இந்த விமர்சனத்திற்கு பிறகு எந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதன் பின் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 167 ரன்கள் அடித்தார் .அதில் இவருடைய அவரேஜ் 83.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 194.19ஆகும். பின் நடந்த டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்தும் அசத்தினார். இவரின் இந்த அபாரமான திறமையால் 2021க்கான ஐபிஎல் தொடரில் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு அனைத்து அணிகளின் போட்டி போட்டு கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடர் குறித்து மேக்ஸ்வெல் தெரிவித்ததாவது : எனக்கு ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறிப்பாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் மேலும் அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

RCBvsKXIP

மேலும் என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும் என்று கூறினார். எனவே வரும் ஆண்டுகளில் பெங்களூரு அணியில் தேர்வாகி கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார். பெங்களூரு அணியும் பின்வரிசையில் ஹிட்டர்கள் இன்றி தவிப்பதால் இவரை எடுக்கவும் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement