கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டராக இருக்கும் கிளன் மேக்ஸ்வெல் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வருகிறார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 போட்டிகளில் விளையாடி 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து ஏன் சரியாக ஆடவில்லை என்பது குறித்து தற்போது பேசியிருக்கிறார் கிளென் மேக்ஸ்வெல்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடியது அப்போது 90 பந்துகளில் 108 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில்… ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் 100% தெளிவாக இருப்பேன்.
அந்த அணியில் அனைவரும் பழக்கமானவர்கள் வருடம் முழுவதும் பயணம் செய்வேன். அந்த அணியில் இருக்கும் 11 பேரும் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அவர்களிடம் சகஜமாக பேசி புரிந்து கொண்டு விளையாட முடிகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் அப்படி இல்லை இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கிறேன்.
அனைவரும் புதிய வீரர்கள் இதனால் என்னால் சரியாக விளையாட முடிவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேக்ஸ்வெல் 2014 ஆம் ஆண்டு மட்டுமே ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார் இவர் அந்த ஆண்டு 552 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல்.
2017 ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்டு 310 ரன்கள் எடுத்து 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் ஆனால் அதன்பின்னர் இவரால் சரியாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை இது குறித்து தான் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் கிளன் மேக்ஸ்வெல்