எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு. மன அழுத்தம் காரணமாக ஆஸி அணியில் இருந்து விலகிய – முன்னணி வீரர்

Maxwell

ஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

Rajitha 2

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டியில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் திடீரென விலகியுள்ளார். இதுகுறித்து அறிக்கையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி மேக்ஸ்வெல் சில மன ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே மீதமுள்ள இலங்கை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அத்துடன் அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் தற்காலிக ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மன ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டு வந்து மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

glenn-maxwell

மேலும் ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கி சிகிச்சை அளிக்கவும் உள்ளார்கள் என்றும் சிறிது நாட்கள் அவர் தனது சொந்த வாழ்க்கையில் திரும்பினால் தான் அவருடைய அழுத்தம் குறைந்து சாதாரண நிலையை அடைவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -