இவரா இப்படி ? அப்போ இந்த வருஷம் பெங்களூரு தான் டாப். ஆதிரடி ஆட்டம் ஆடிய முன்னணி வீரர் – கோலி,ரோஹித் வியப்பு

RcbvsMi-1
- Advertisement -

கிளன் மேக்ஸ்வெல் சமீப காலங்களாக ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு மட்டும் தான் நன்றாக விளையாடுவார் ஐபிஎல் தொடர் என்று வந்து விட்டால் நன்றாக விளையாட மாட்டார் என்கிற பிம்பம் உருவானது. மேலும் போதாக்குறைக்கு இந்த ஆண்டு பஞ்சாப் அணி அவரை தனது அணியில் இருந்து வெளியேற்றி விட்டது. பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறி அவரை இந்த ஆண்டு நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி 14.25 கோடிக்கு அவரை வாங்கியது.

maxwell

- Advertisement -

இவருக்கு இவ்வளவு தொகையை நிச்சயம் பெங்களூரு அணியில் மறுபடியும் சொதப்ப போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று அதிரடியாக ஆடி அனைவரது பேச்சையும் காணாமல் போகச் செய்தார். மேக்ஸ்வெல் என்று சொன்னாலே அவரது சிக்ஸர் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆனால் மேக்ஸ்வெல் சென்ற ஆண்டு ஒரு சிக்சர் கூட அடிக்காமல் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தார்.

ஆனால் இந்த ஆண்டு நடந்த முதல் போட்டியிலேயே 2 சிக்சர்கள் அடித்து மறுபடியும் வேறு வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அவர் நேற்று ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் சிலர் மேக்ஸ்வெல் பழைய பார்முக்கு வந்துவிட்டார். பஞ்சாப் அணிக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஆடி இதேபோல் அவர் தற்போது ஆடி வருகிறார் என்றும், இந்தத் தொடர் முழுவதும் அவர் நிச்சயமாக நன்றாக விளையாடி பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Maxwell

மேக்ஸ்வெல் நேற்று ஒரு முனையில் நிதானமாக நின்று மிகப் பொறுப்பாக ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்து வந்தார். அதிலும் குறிப்பாக 100 மீட்டருக்கு பெரிய சிக்ஸர் ஒன்றினை விளாசிய மேக்ஸ்வெல்லை மறுமுனையில் நின்று பார்த்த விராட் கோலி மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

maxwell 1

மேக்ஸ்வெல் என்றாலே மிக அதிரடியாக ஆடி ஏதாவது ஒரு பந்தில் சிக்ஸர் அடித்து அவுட் ஆவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மிகப் பொறுப்புடன் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் விராட்கோலி மட்டுமல்லாமல் எதிர் அணி கேப்டன் ரோகித் சர்மா வையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.

Advertisement