மேக்ஸ்வெல் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணி. கேப்டன் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Maxwell

இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது பல்வேறு சிக்கல்களை கடந்து செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிக்கை வெளியானது. அதன் பிறகு இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

ipl

மேலும் இத்தொடர் குறித்த பல்வேறு விடயங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளாக எழுப்பி வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வீரர்களும் அவ்வப்போது முக்கிய அப்டேட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி பலரும் தங்களது சிறந்த டி20 அணியை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் தனக்குப் பிடித்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். cricbuzz இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள மேக்ஸ்வெல் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், மும்பை அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டனுமான ரோகித் சர்மாவிற்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

துவக்க வீரர்களாக வார்னர் மற்றும் விராட் கோலியை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் மூன்றாவது நான்காவது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். ஆல்-ரவுண்டராக அவரையும், ரசலையும் இணைத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக தோனியும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கை மட்டும் சேர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, மோகித் சர்மா ஆகியோர் அணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேக்ஸ்வெல் தேர்வு செய்த அணி இதோ : 1) வார்னர், 2) விராட் கோலி, 3) டிவில்லியர்ஸ், 4) ரெய்னா, 5) மேக்ஸ்வெல், 6) ரசல், 7) தோனி(கேப்டன்), 8) ஹர்பஜன் சிங், 9) பும்ரா, 10) புவனேஷ்வர் குமார், 11) மோஹித் சர்மா.