பும்ரா, ஷமி கிடையாது.. அந்த 2 இந்திய பவுலர்களை சமாளிச்சுட்டா ஆஸ்திரேலியா ஜெய்க்கும்.. மேக்ஸ்வெல் பேட்டி

Glenn Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகிறது. சொல்லப்போனால் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் அடுத்தடுத்து வென்ற இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவும் இப்போதே தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும்.

- Advertisement -

கிளன் மேக்ஸ்வெல் கணிப்பு:

அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய தரமான அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் தங்களுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். அவர்களுடைய ஆட்டமே இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் மேக்ஸ்வெல் கணித்துள்ளார்.

குறிப்பாக அஸ்வின் – ஜடேஜா சமயத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் டாப் 2 ரவுண்டர்களாக ஜொலித்து வருகிறார்கள். எனவே ஏதேனும் ஒரு துறையில் அவர்கள் இந்தியாவுக்கு பலமாகவும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாகவும் இருப்பார்கள் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் – ஜடேஜா ஜோடி:

“அஸ்வின், ஜடேஜா போன்றவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக நாங்கள் விளையாடி வருகிறோம். அவர்களை நாங்கள் எப்போதும் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறோம். பெரும்பாலும் அவர்களுடன் நாங்கள் நடத்திய போட்டி தான் வெற்றி முடிவை நிர்ணயித்திருக்கின்றன. ஒருவேளை அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடினால் நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை கண்டறிய முடியும்”

இதையும் படிங்க: கான்பூர் மைதானத்தில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? போலீசார் தரப்பில் சொல்வது என்ன? – விவரம் இதோ

“கிட்டத்தட்ட ஒரே வயதில் உள்ள அவர்கள் என்னுடைய கேரியரில் பெரும்பாலும் இந்திய அணியில் இருந்து வருகிறார்கள். அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா சமீப காலங்களில் அசத்தி வருகிறார். முதல் முறையாக 2013 ஐபிஎல் தொடரில் மும்பையில் அவரை பார்த்த நான் தினந்தோறும் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டேன். அங்கிருந்து அவர் இன்று 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக பரிணமிப்பதை பார்ப்பது அற்புதமான கதை” என்று கூறினார்.

Advertisement