கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து கழட்டிவிடப்படும் அதிரடி மன்னன் – விவரம் இதோ

KXIP-1
- Advertisement -

13வது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த வருடம் பெரும் குழப்பத்திற்கு இடையே விறுவிறுப்பு இல்லாமல் மந்தமான தொடராக அமைந்தது. ரசிகர்கள் இல்லை, மூடிய மைதானம், பல வீரர்கள் விலகல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக ஆடவில்லை. இதுபோன்ற பல்வேறு அதிர்ச்சியான விஷயங்கள் இருந்தன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எந்த ஒரு அணியும் ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்தன.

Rohith

- Advertisement -

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த வருடம் மிகப் பெரிய ஏலம் நடக்கப்போவதாக சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். இதில் அனைத்து அணிகளும் தங்கள் அணியை கலைத்துவிட்டு புதிய அணியாக மாற்ற முயற்சிக்கும். அந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் பல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த 5 வருடங்களாக பெரிதாக ரன் ஏதும் அடிக்காமல் இருக்கும் கிளன் மேக்ஸ்வெல் அணியிலிருந்து கண்டிப்பாக நீக்கப்படுவார் என்று தெரிகிறது. பயிற்சியாளராக அணில் கும்ளே மற்றும் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருவரும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

maxwell 1

இந்த வருடத்தில் 11 போட்டிகளில் விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதன் சராசரி 15 ஸ்ட்ரைக் ரேட் 100. 11 போட்டிகளில் விளையாடி 106 பந்துகளில் மட்டுமே களத்தில் நின்று சந்தித்து இருக்கிறார் என்பது மோசமான செய்வீர் .

Maxwell

கடைசியாக 2014ஆம் ஆண்டு 500+ ரன்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் எந்த ஒரு தொடரிலும் அவர் 300 ரன்களை தாண்டியதில்லை. இதன் காரணமாக மேக்ஸ்வெல் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் கழற்றி விடும் என்றே தெரிகிறது.

Advertisement