- Advertisement -

இந்திய பெண்ணுடன் நிச்சயதார்தத்தை உறுதி செய்த மேக்ஸ்வெல் – வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டராக பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். 31 வயதாகும் இவர் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருந்தார்.

அப்போது தன்னை அந்த மோசமான மனநிலையில் இருந்து தன் காதலி தான் மீட்டு கொண்டு வந்தார் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது காதலியான வினி ராமன் என்பவரை 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் அவர் தற்போது நிச்சயதார்த்தம் முடித்து மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இந்த நிச்சயதார்த்த நிகழ்விற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by