IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு – மேலும் ஒரு வீரர் அணியில் இருந்து விலக வாய்ப்பு

AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இந்த இரண்டு போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியையும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது.

அதன் பிறகு நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Maxwell

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் கிளென் மேக்ஸ்வெல் இடம் பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக பாதிக்கப்பட்ட மேக்ஸ்வெல் கடந்த பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் சமீபத்தில் காயத்திலிருந்து விடுபட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இந்நிலையில் உள்ளூர் தொடரில் மேக்ஸ்வெல் விளையாடிக் கொண்டிருந்தபோது பீல்டிங் செய்கையில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வலியால் துடித்து அவருக்கு பரிசோதனை செய்து பார்க்கவையில் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முதல் நாள் வர்ணனையாளர், அடுத்த நாள் அதிரடி பினிஷராக மிரட்டல் – ஆர்சிபி அணிக்காக தீயாக விளையாடும் டிகே

இதன் காரணமாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டையும் புறக்கணித்து உள்ள மேக்ஸ்வெல் கட்டாயம் இந்தியாவில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் தவறவிடுவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் இடம் பெறாமல் போனது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement