மைக்கில் பேசிக்கொண்டே அசால்டாக ரன்அவுட் செய்த மேக்ஸ்வெல் – வைரலாகும் வீடியோ

Maxwell
- Advertisement -

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மைக்கில் வர்ணனையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர் ஒருவர் அடித்த பந்து பவுண்டரி நோக்கி செல்ல அதனை வர்ணனையாளர்களுடன் பேசிக் கொண்டே ஓடி வந்த பந்தை லாவகமாக பிடித்து தனது மின்னல் வேக த்ரோ மூலம் பேட்ஸ்மேனை ரன்அவுட் செய்தார்.

அவர் பேசிக்கொண்டே ரன்அவுட் செய்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் என்ன காரியம் செய்தாலும் அவருடைய வேலையில் அவர் சரியாக இருக்கிறார் மேலும் இந்த மின்னல் வேக த்ரோவை பேட்ஸ்மேன் எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement