KXIP vs KKR : இவர்களை மகிழ்விக்கவே நான் சிறப்பாக விளையாடினேன் – கில் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Gill
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Karthik

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Karthik 1

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் கில் கூறியதாவது : இந்த போட்டி சிறப்பான போட்டியாகும். சொந்த ஊரில் முதல் ஆட்டநாயகன் விருதினை பெற்றுள்ளேன். இந்த போட்டியில் பாட்னர்ஷிப் முக்கியம் என்று நினைத்து விளையாடினேன். நான் பந்துக்கு ஒரு ரன் எடுத்தபோதும் ரன்ரேட் நல்ல நிலையிலே இருந்தது. அதனால் துவக்கத்தில் பொறுமையாக ஆடினேன்.

Gill

மேலும், எனது சொந்த ஊரிலிருந்து உறவினர்கள் எனது ஆட்டத்தை காண வந்திருந்தனர். அவர்களை மகிழ்ச்சி படுத்தவும் நான் சிறப்பாக ஆடினேன். இப்போதைக்கு பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவதே எண்களின் நோக்கம் என்று கில் கூறினார்.

Advertisement