சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு – டி20 அணியில் மாற்றம்

Gill Jaiswal Sai
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணிக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு எவ்வித போட்டியும் இல்லை என்பதனால் முழு ஓய்வில் இருக்கிறது.

இந்திய டி20 அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :

பின்னர் இந்திய அணி அடுத்த தொடராக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. கடந்த முறை நடைபெற்ற ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற வேளையில் அந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

- Advertisement -

ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் நடைபெற இருப்பதனால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே நடப்பு சாம்பியனாக பங்கேற்கும். எதிர்வரும் இந்த தொடரில் இந்திய அணியின் சார்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிகிறது.

அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணியில் மீண்டும் சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியதை அடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

அதனால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ரிங்கு சிங், என பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று பந்துவீச்சு யூனிட்டிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தன. அதனால் கடந்த சில தொடர்களாக டி20 அணியில் பல்வேறு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெறாத அவர் 3 விதமான இந்திய அணியில் விளையாட தகுதியானவர் – கங்குலி ஆதரவு

இந்நிலையில் மீண்டும் முன்னணி வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement