இந்திய அணியின் 4 ஆவது இடத்திற்கு இந்த இளம் வீரர் பொருத்தமாக இருப்பார் – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறியதிலிருந்து இந்திய அணியின் நான்காவது இடத்தில் ஆடும் வீரர் குறித்து பேச்சுக்கள் அதிகம் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த 4ஆவது இடம் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் நான்காவது இடத்தில் இறங்கும் வீரர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணியின் இளம் வீரரான கில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய அணியில் அவர் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் தேர்வு செய்யப்படவில்லை. ஒருநாள் தொடரில் தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அணியில் அவரை உடனடியாக இணையுங்கள். அவர் இந்திய அணி 4-வது வீரராக விளையாடுவதற்கு பொருத்தமாக இருப்பார். மேலும் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறினார்.

Gill

சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இளம் வயதில் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அண்டர் 19 அணியிலும் அவர் சிறப்பாக விளையாடினார் மேலும் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் கில் சிறப்பாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement