- Advertisement -
இந்திய கிரிக்கெட்

குல்தீப் யாதவை சேர்க்காமல் வாஷிங்க்டன் சுந்தரை சேர்த்தது ஏன்? விளக்கம் கொடுத்த – சுப்மன் கில்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது ஏன்? : சுப்மன் கில் விளக்கம்

அதேவேளையில் இந்த தொடரினை இந்திய அணி தோல்வியுடன் துவங்கியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அளித்திருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் உள்ள மாற்றங்களை அறிவித்த சுப்மன் கில் பும்ரா, ஷர்துல் மற்றும் சாய் சுதர்சன் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி இடம்பெறுவதாக அறிவித்திருந்தார். இதனால் மீண்டும் ஒருமுறை குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

- Advertisement -

ஏற்கனவே இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் குல்தீப் சிறப்பாக செயல்படுவார் என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் அவர் இந்த போட்டியில் விளையாடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் குல்தீப் யாதவை அணியில் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது ஏன்? என்பது குறித்து டாசின் போது கேப்டன் சுப்மன் கில் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : 2-ஆவது போட்டியில் பும்ராவை சேர்க்காதது இதற்காகத்தான்.. ஆனா 3 ஆவது போட்டியில் ஆடுவாரு – சுப்மன் கில் உறுதி

இந்த போட்டியில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. ஆனால் கடந்த போட்டியின் போது இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்களால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. எனவே தான் பின்வரிசையில் ரன் குவிக்கக்கூடிய சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்துள்ளோம். அதன்மூலம் நமது அணியின் பேட்டிங் ஆர்டரின் ஆழமும் அதிகரிக்கும் என்பதனாலே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -