சுப்மான் கில்லால் டெஸ்டில் பறிபோன உமேஷ் யாதவின் இடம் – எப்படி தெரியுமா ?

Umesh

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Umesh

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் இந்த வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பெயர் இடம்பெறவில்லை. இந்த தொடரில் அவரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கு முக்கிய காரணமாக இளம்வீரர் கில் பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்திய ஏ அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் கில் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வுசெய்யப்பட வேண்டும் என்ற கட்டாயமும் அவரின் தொடர்ச்சியான ஆட்டம் இந்திய அணிக்கு ஏன் தேர்வு செய்யக் கூடாது என்ற கேள்வியும் எழுப்பியது. இதனால் கில்க்கு வாய்ப்பு அளிக்கவே உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

umaesh yadhav

இருப்பினும் மற்றொரு தரப்பு ஷமி, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதாலும் மேலும் பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அணியின் வாய்ப்புக்காக காத்திருப்பதாலும் உமேஷ் தற்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.