இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
2 இந்திய வீரர்களுக்கு ஓய்வு :
இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது அக்டோபர் 6-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக நீடிப்பார். இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்கள். அதேவேளையில் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாட இருப்பதினால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏனெனில் வங்கதேச தொடர் முடிந்த கையோடு அடுத்த சில தினங்களிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் காரணமாக அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜாம்பவான் ஜஹீர் கான், ஆஸியின் ஹேசல்வுட் சாதனைகளை.. உடைத்து அஸ்வின் படைக்க உள்ள 2 சாதனைகள்
மேலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.



