இன்னும் ஏன் லேட் பண்றீங்க ? சீக்கிரம் இவரை துணைக்கேப்டன் ஆக்குங்க – முன்னணி வீரருக்காக குரல் கொடுத்த கில்க்ரிஸ்ட்

Gilchrist
- Advertisement -

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த அதிநவீன கேமராக்கள் மூலம் இந்த காட்சிகள் பதிவானதால் ஐசிசி இவர்களை விசாரித்து, இருவருக்கும் தலா 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. களத்தில் வைத்த பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.

warnersmith

- Advertisement -

இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலிய அணியை இவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
தங்களது தடை காலம் முடிவடைந்து ஆஸ்திரேலிய அணியில் இணைந்த வார்னர் மற்றும் ஸ்மித் உலக கோப்பை தொடரில் பங்குபெற்றனர்.

உலக கோப்பை தொடரில் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் தனது திறமையை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான தொடர்களிலும் இடம்பெற்ற விளையாடி வருகின்றனர். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தனது கேப்டன் பொறுப்பை மீண்டும் கொடுக்கவில்லை.

Smith

இந்நிலையில் , இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் “ஸ்டீவ் ஸ்மித்திற்கு மீண்டும் துணைக்கேப்டன் பொறுப்பை உடனடியாக கொடுக்க வேண்டும். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Smith

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸிமித்திற்கு மீண்டும் அணியின் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் கில்கிறிஸ்ட் துணை கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement