அணியில் மிகப்பெரிய வீக்னெஸ் இருக்கு. சீக்கிரம் சரி பண்ணுங்க இல்லனா எல்லாம் க்ளோஸ் – கில்க்ரிஸ்ட் எச்சரிக்கை

Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றது. அதன்பின்னர் அந்த அணியின் தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. இதுதான் எதார்த்த மாக இருக்கும் உண்மை அதிலும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அனைத்து விதமான போட்டிகளிலும் மோசமாக விளையாடி கொண்டிருக்கிறது.

aus

- Advertisement -

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்கத்திற்கு பிறகு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகின்றது டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது
கடைசியாக ஒரு போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் தற்போது ஒரு நாள் போட்டியிலும் தொடரை கோட்டை விட்டு விட்டது .

முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி கனகச்சிதமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்தது 136 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தது. ஆனால் திடீரென விக்கெட்டுகள் சரிந்து 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது போட்டியிலும் தோற்றுவிட்டது .

aus

இதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள்தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கில்க்ரிஸ்ட் கூறியுள்ளார். அதனை தற்போது சுட்டிக்காட்டியுள்ள அவர் கூறுகையில் …ஆஸ்திரேலிய அணி பலமான அணி தான் ஆனால் அந்த அணியில் ஒரு மிகப் பெரிய ஓட்டை இருக்கிறது.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக இல்லை. இது எதிர் அணிகளுக்கு தெரிந்திருக்கும்.

australia

இதுவே ஆஸ்திரேலியாவின் பலவீனமாக மாறிவிட்டது. இதனை சீக்கிரம் நாம் சரிசெய்து ஆகவேண்டும் ஏனெனில் அடுத்தடுத்து நாம் நிறைய உலகக்கோப்பை தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது இதன்காரணமாக மிடில் ஆர்டரை கட்டமைப்பது அவசியம் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட்.

Advertisement