தோனியை காப்பி அடிக்க வேண்டாம். இதை மட்டும் செய்யுங்க பெரிய ஆளா வருவீங்க – பண்டிற்கு கில்க்ரிஸ்ட் ஆலோசனை

Pant

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடாத இவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கீப்பரை உருவாக்கும் முயற்சியை கையில் எடுத்த இந்திய அணி தொடர்ந்து பண்டிற்கு வாய்ப்பு அளித்து வருகிறது.

Pant

அதற்காக டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் அவரது முறையான ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் அறிவுரை ஒன்றினை தற்போது வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய ரசிகர்கள் வேறு யாருடனும் தோனியை ஒப்பிட்டு பேசக்கூடாது.

தோனி மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் அவருடைய சாதனையை முறியடிக்கும் வீரர் நிச்சயம் வருவார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்க வாய்ப்பில்லை. பண்ட் திறமை வாய்ந்த இளம் வீரராக உள்ளார். தொடக்கத்திலேயே அவர் மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் ஒவ்வொரு நாளும் டோனியை போல் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கக்கூடாது நான் பண்டிற்கு கூறுவது யாதெனில் :

Pant

தோனியை அப்படியே காப்பி அடிக்க வேண்டாம். அவரைப்போல நீங்கள் செயல்பட நினைப்பது தவறான ஒரு விடயமாகும். தோனியிடம் இருந்து என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அதனை எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்களால் தோனி போன்று செயல்பட முடியாது. நீங்கள் நீங்களாக இருந்தால் உங்களது சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுக்க முடியும் என்று நினைத்து உங்களால் கொடுக்க முடிந்தததை இந்திய அணிக் கொடுங்கள். அது உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கில்க்ரிஸ்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -