இப்படி ஒரு மோசமான பேட்டிங் பொஷிஷனை பார்த்தே இருக்க மாட்டீங்க – ஆஸ்திரேலிய வீரரின் அட்டகாசம்

Bailey

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷீல்டு தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ்மானியா மற்றும் விக்டோரியா ஆகிய உள்ளூர் அணிகள் போட்டி நேற்று நடந்தது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் விக்டோரியா அணி 121 ரன்களில் ஆட்டமிழக்க அதனையடுத்தே டாஸ்மானியா அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ்மானியா அணி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஜார்ஜ் பெய்லி வித்தியாசமான பொசிசனில் நின்று பேட்டிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பீட்டர் சிடிலின் பந்தை எதிர்கொள்ளும்போது முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டு பின்னர் அந்த பந்து பவுண்டரி அடித்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருவது குறிப்பிடத்தக்கது.