பஸ்பால் போதும் சாமி.. மெக்கல்லமை கழற்றி விட்டு அந்த ஆஸி வீரரை கோச்’சா போடுங்க.. பாய்காட் விளாசல்

Geoffery Boycott
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.

மறுபுறம் அதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 15 தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக 2010/11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் 15 வருடங்களாகியும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திணறுகிறது.

- Advertisement -

பஸ்பால் போதும் சாமி:

இருப்பினும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெல்வோம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விடுத்தனர். ஆனால் அதற்கு தகுந்தாற்போல் விளையாடாத இங்கிலாந்து 11 நாட்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை பாழாக்கியுள்ள பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி ஃபாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் கில்லஸ்பி அல்லது இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று அவர் இங்கிலாந்து வாரியத்திற்கு பரிந்துரைத்துள்ளார். இது பற்றி ஃபாய்காட் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய கிரிக்கெட்டுக்கு செய்துள்ள விஷயங்களுக்கான பாராட்டுக்கள் ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ்க்கு செல்ல வேண்டும்”

- Advertisement -

மெக்கல்லமை நீக்குங்க:

“பஸ்பால் தன்னுடைய ஓட்டத்தை ஓடி முடித்துள்ளது. தனிப்பட்ட அணுகுமுறை பொதறிவை தாண்டிச் செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது. ஸ்டோக்ஸ், மெக்கல்லம் ஒன்றுமில்லாத ஓட்டையை தோண்டுகிறார்கள். ஒருவேளை நீங்கள் செய்வது வேலையாகவில்லையெனில் தோண்டுவதை நிறுத்துங்கள். நாம் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல மாற்றம் அவசியம். அதற்காக பயிற்சியாளரை மாற்றலாம்”

இதையும் படிங்க: 10 வருஷம் ஆச்சு.. ஒருவழியா டி20 போட்டிகளில் முக்கிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

“தற்போதைய தலைமை நம்மை நல்ல ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றாலும் சிறந்த அணிகளுக்கு எதிராக வெற்றி பெறவில்லை. எனவே இது மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம். நல்ல சம்பளத்துடன் கூடிய இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு பலர் காத்திருக்கிறார்கள். யோர்க்ஷைர் அணிக்காக ஜேசன் கில்லஸ்பி சிறந்த வேலையை செய்துள்ளார். அல்லது நீங்கள் இங்கிலாந்தை சேர்ந்த அலெக் ஸ்டீவர்ட் போன்றவரை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement