கொஞ்சம் பொதறிவை யூஸ் பண்ணுங்க.. 2வது டெஸ்ட் தோல்வியால் ஸ்டோக்ஸ் – மெக்கல்லமை வெளுத்த ஜெஃப்ரி பாய்காட்

Geoferry Boycott
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி இங்கிலாந்து நிறைய வெற்றிகளை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து இம்முறை வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து அதை முதல் போட்டியில் செய்தும் காட்டியது. இருப்பினும் அதே அணுகுமுறையை பயன்படுத்தி இரண்டாவது போட்டியில் 399 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பொதறிவை யூஸ் பண்ணுங்க:
இந்நிலையில் எல்லா நேரமும் அதிரடியாக விளையாடி வெல்ல முடியாது என்ற பொதறிவை ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் பயன்படுத்தி விளையாட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்கட் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அட்டாக் அட்டாக் அட்டாக் ஆகியவற்றில் ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறந்தவர்கள்”

“ஆனால் இது வெல்ல முடியாவிட்டால் அதற்கு பதிலாக அமோகமான தோல்வியில் இறங்குவோம் என்று சொல்வது போல் இருக்கிறது. பஸ்பால் வேலை செய்யும்போது நல்ல பொழுது போக்காகும். ஆனால் பொருளுக்கு மேல் ஒரு லட்சியத்தை நீங்கள் நம்பினால் சதியை இழந்து விடுவீர்கள். இன்று இங்கிலாந்து ஆட்டத்தை கைவிட்டது. பஸ்பால் தோல்வியடைந்தது. ஓவருக்கு ஐந்து ரன்கள் அடிப்பது நல்ல பொழுதுபோக்கு என்றாலும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்திற்கு பின் தங்களுடைய விக்கெட்டை இழந்தனர்”

- Advertisement -

“பொதுவாக உங்களுடைய ஒரு பேட்ஸ்மேன் பெரிய சதமடிப்பதே 400 ரன்களை சேசிங் செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆனால் பஸ்பால் அணுகுமுறையால் ஜோ ரூட் களத்திற்கு வந்ததும் தூக்கி அடிக்க முயற்சித்து தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார். டெக்னிக்கல் அளவில் இங்கிலாந்தின் தரமான பேட்ஸ்மேனான அவர் தன்னுடைய சொந்த ஆட்டத்திற்கு வெளியே வந்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்”

இதையும் படிங்க: 240 ரன்ஸ்.. 25 வருட வரலாற்றை உடைத்த ரச்சின் ரவீந்திரா.. புதிய தனித்துவ சாதனை.. வலுவான நிலையில் நியூசிலாந்து

“அவர்களுடைய மனதில் டி20 போடுவது போல் தெரிகிறது. ஒவ்வொரு பந்திலும் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சிக்கும் இங்கிலாந்தின் பேட்டிங்கில் டி20 ஆட்டம் தெரிகிறது. ஆனால் ஏன் அவர்கள் கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி நேர்மறையாக விளையாடக்கூடாது? பேட்டிங் என்பது சூழ்நிலை அல்லது எதிரணியை அறிந்து செயல்படுவதாகும். அதில் எப்போது அடிக்க வேண்டும் எப்போது தடுப்பாட்டம் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்து விளையாடுங்கள்” என்று கூறினார்.

Advertisement