விராட் அளவுக்கு இந்தியா ரோஹித்தை மிஸ் பண்ணாது.. கோலியின் ஓய்வுக்கு இதான் காரணம்.. பாய்காட் பேட்டி

Geoffery Boycott
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. அதனால் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் அவர்களுடைய அனுபவத்தை மிஸ் செய்யும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி விராட் கோலி அளவுக்கு ரோகித் சர்மாவை மிஸ் செய்யாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கூறியுள்ளார். ஏனெனில் விராட் கோலி அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று அவருக்கு கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரோஹித் அவ்ளோ ஒர்த் இல்ல:

“ரோஹித் சர்மா சூப்பரான பேட்ஸ்மேன். தம்முடைய சிறந்த நேரங்களில் அவர் அழகாக அடிக்கக் கூடியவர். ஆனால் விராட் கோலி அளவுக்கு அவர் மிஸ் செய்யப்பட மாட்டார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறதே தவிர சிறப்பாக இல்லை. விராட் கோலி போல ரோஹித் சர்மா எப்போதும் இயற்கையாக ஒரு தடகள வீரரைப் போல் இருந்ததில்லை”

“இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவது மிகவும் கடினம் என்பது ரோஹித் சர்மாவுக்கு தெரியும். ஏனெனில் இங்கே பந்து மிகவும் அதிகமாக நகரும். அதனால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு நீங்கள் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார். அத்துடன் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடியதால் விராட் கோலி மனதளவில் பாரத்தை சந்தித்ததாக பாய்காட் கூறியுள்ளார்.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம்:

அதுவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறக் காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அவர்களுடைய ஓய்வு இங்கிலாந்தை தோற்கடிப்பதில் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவைக் கொடுக்கும். குறிப்பாக விராட் கோலி இல்லாதது மிகப்பெரிய இழப்பு. ஏனெனில் அவர் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தியவர்”

இதையும் படிங்க: இந்திய பேட்ஸ்மேன்களை 20 பந்தில் முடிப்போம்.. அவங்க இல்லனாலும் இந்தியா பலமான அணியே.. கார்ஸ் பேட்டி

“இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய போட்டிகளில் விளையாடுகிறது. அதனால் கொஞ்சமாக மட்டுமே ஓய்வு கிடைக்கிறது. அந்த பணிச்சுமை மனதளவில் உங்களிடம் சோர்வை ஏற்படுத்தும். நீங்கள் எவ்வளவு திறமை மற்றும் அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இல்லையெனில் சவாலை சமாளிக்க முடியாது. அது உங்களை மூழ்கடிக்கக் கூடியதாக இருக்கும்” எனக் கூறினார்.

Advertisement