இந்திய பேட்ஸ்மேன்களை 20 பந்தில் முடிப்போம்.. அவங்க இல்லனாலும் இந்தியா பலமான அணியே.. கார்ஸ் பேட்டி

Brydon Carse
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனுபவ இந்திய வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. அதனால் இம்முறை இளம் இந்திய அணி சவாலான இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021இல் விராட் கோலி தலைமையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்தை தோற்கடிக்க முடியவில்லை.

- Advertisement -

பலமான இந்தியா:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் ஆழமானத் திறமையைக் கொண்டுள்ள இந்தியா இப்போதும் பலமான அணியாக இருப்பதாக கார்ஸ் கூறியுள்ளார். அதே சமயம் ஜெய்ஸ்வால், சுதர்சன் போன்ற இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடுவதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களை இங்கிலாந்து பிட்ச்களில் முதல் 20 பந்துகளில் அவுட் செய்யும் அளவுக்கு தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக பிரைடன் கார்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் ஆகியோர் இல்லாதது இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய இழப்பாகும். உலகத்தரம் வாய்ந்த அவர்கள் நீண்ட காலம் விளையாடிய அனுபவமிக்க வீரர்கள்”

- Advertisement -

20 பந்தில் முடிப்போம்:

“ஆனால் ஆழமானத் திறமையைக் கொண்டுள்ள இந்தியா இங்கே தரமான வீரர்களை கொண்டு வந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவர்களால் மிகவும் வலுவான 11 பேர் கொண்ட அணியை களமிறக்க முடியும். அவர்கள் கொண்டு வரும் எந்த வகையான சவால்களையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் பவுலிங் செய்யும் பேட்ஸ்மேன் யாராக இருந்தாலும் அவர் புதிய பந்தில் அல்லது முதல் 20 பந்துகளில் அவுட்டாக வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: ஐசிசி 2026 மகளிர் டி20 உ.கோ: இந்தியாவின் அட்டவணை வெளியீடு.. பாகிஸ்தானுடன் மோதல் எப்போது?

“எனவே இந்தியாவின் அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. எங்கள் அனைவரிடமும் அதற்குத் தகுந்த திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் இருக்கிறது. எனவே அவர்களை நாங்கள் முடிந்தளவுக்கு வேகமாக சாய்ப்போம்” எனக் கூறினார். அந்த சவாலை சமாளித்து 2007க்குப்பின் இங்கிலாந்தில் தொடரை வெல்ல இந்தியா போராட உள்ளது.

Advertisement