அந்த சில்லித்தனத்தை செஞ்ச ரிஷப் பண்ட் தன்னையே காயமாக்கி.. இந்தியாவையும் முடிச்சுட்டாரு.. பாய்காட் சாடல்

Geoffery Boycott
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்த போது பாதத்தில் பலத்த காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக நடக்க முடியாமல் தடுமாறிய அவர் வண்டியில் ஏறிச் சென்றதால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவுக்காக காயத்தை பொருட்படுத்தாத அவர் முதலுதவிகளை மட்டும் எடுத்துக்கொண்டு களமிறங்கி 54 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

தாமும் காயமாகி:

இந்நிலையில் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக ரிசப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தது வேடிக்கையான (சில்லித்தனமான) செயல் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்கட் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ததால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கும் பங்கம் விளைவித்துள்ளதாக பாய்காட் விமர்சித்துள்ளார். ஏனெனில் அதுவரை பண்ட் நன்றாக பேட்டிங் செய்ததால் இந்தியா 450 ரன்கள் அடிப்பதற்கான அடித்தளத்தைப் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி பாய்காட் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரர் காயப்பட்டு அவரது திறன் பாதிக்கும் போது எப்போதுமே வருத்தமாக இருக்கும். ரிஷப் பண்ட் திறமைசாலி. ஆனால் இதற்காக அவர் தன்னையே குறை சொல்ல வேண்டும். ஏனெனில் வழக்கமாக அவர் பேட்டிங் செய்த போது இந்தியா கட்டுப்பாட்டுடன் விளையாடியது. அதனால் அவர் மூர்க்கத்தனமான ஷாட்டை அடிக்கத் தேவையில்லை”

- Advertisement -

இந்தியாவின் வெற்றியை முடித்த பண்ட்:

“ரிஷப் பண்ட் வித்தியாசமாக அடிக்கும் போது அது நன்றாக அமைந்தால் மக்கள் ஆச்சரியப்பட்டு பாராட்டுகிறார்கள். ஆனால் அதுவே சரியாக அமையாத போது சில்லித்தனமாக இருக்கிறது. நேற்றைய நாளில் இந்தியா பேட்டிங்கில் அற்புதமான நிலையில் இருந்தார்கள். இருப்பினும் அதுவே அவருடைய இயற்கையான பேட்டிங் என்று பலரும் சொல்வார்கள்”

இதையும் படிங்க: இந்திய கேப்டன் சுப்மன் கில் சொன்னது 90 நிமிட நாடகம் பொய்.. நாங்க செஞ்சது நியாயம் தான்.. கிராவ்லி பதிலடி

“ஆனால் காயத்தால் அவர் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாதது இந்தியாவின் வெற்றியைப் பாதிக்கலாம். அது அவர் இந்திய அணிக்காக சேர்க்கக்கூடிய ரன்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்தளவுக்கு அவர் நல்ல வீரர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து காயத்தால் கடைசி போட்டியில் ரிசப் பண்ட் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement