தற்காலிக ஓய்வு முடிவை அறிவித்த க்றிஸ் கெயில். ரசிகர்கள் வருத்தம் – காரணம் இதுதானாம்

Gayle
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி அதிரடி வீரரான கிறிஸ்டின் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 301 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 40 வயதாகும் இவர் தற்போது கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

Gayle 1

- Advertisement -

மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர்களுடன் இணைந்து இந்திய அணிக்கு எதிராக விளையாட வைக்க விரும்பியது ஆனால் நான் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று இப்போது முடிவு செய்துள்ளேன். மேலும் இந்திய தொடர் மட்டுமின்றி பிக்பாஷ் டி20 தொடரிலும் நான் விளையாட மாட்டேன் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது என்று கூறினார்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் சரியாக விளையாடாத கெயில் அப்பொழுது மன அழுத்தத்தில் இருந்தார் என்பது தெரியவந்தது. ஏனெனில் அப்போது கெயில் அளித்த பேட்டி ஒன்றில் நான் சரியாக விளையாடவில்லை என்றால் அணிக்கு பாரமாகி விடுகிறேன் மேலும் அணியில் உள்ள வீரர்களும் அணி நிர்வாகம் என்னை நன்றாக விளையாட ஒரு வீரராக பார்க்கிறது.

Gayle

நான் முன்பு என்ன அணிக்காக செய்தேன் என்று என்பதை பார்க்க மறுக்கிறார்கள் மேலும் ஒன்றிரண்டு போட்டியில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை அளிக்கத் தவறினால் அது அணிக்கு சுமை ஆகிவிடுகிறது என்றும் மரியாதை குறைவாக நடத்துகிறார்கள் என்றும் பேசியிருந்தார். எனவே வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்பாரா என்பது அவர் கையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement