எனக்கு பிடித்த நம்பர் இதுதான், அப்போதான் கிரிக்கெட்டிலிருந்து போவேன் – கெயில் உறுதி

Gayle

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகும் ஓய்வு பெறாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

Gayle 1

தற்போது வங்கதேச பிரியர்கள் ஆடி வரும் 40 வயதான கெயில் நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த க்றிஸ் கெய்லின் அதிரடி# ஜாலத்தை இன்னும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். நானும் இந்த விளையாட்டு மீது தனியாத ஆர்வத்துடன் தான் இருக்கிறேன்.

இன்னும் எவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியுமோ ? அவ்வளவு நாட்கள் நான் விளையாட விரும்புகிறேன். எனக்கு இன்னும் உள்ளூர் மற்றும் வெளியூர் என லீக் போட்டிகளில் விளையாட நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. என்னை பொருத்தவரை என் உடல் ரீதியாக நான் இப்பொழுதும் விளையாடுவதற்கு தகுதியாக தான் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாள் விளையாடுவீர்கள் ? என்று என்னிடம் நிறையபேர் கேட்கிறார்கள்.

gayle

என்னை பொறுத்தமட்டில் 45 எனக்கு நல்ல நம்பர். எனவே 45 வயது வரை விளையாடுவது எனது இலக்காக கொண்டு உள்ளேன். இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றும் கெய்ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -