இந்த மாதிரி பிட்ச்ல அவரால என்னுடைய விக்கெட்டை வீழ்த்தவே முடியாது – கெத்தாக பேசிய கெயில்

Gayle
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

KXIPvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Mandeep 1

இந்நிலையில் போட்டி முடிந்து தனது அதிரடி குறித்து பேசிய ஆட்டநாயகன் கிரிஸ் கெயில் கூறியதாவது : இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இன்னும் இதே போன்ற ஆட்டத்தை தொடர் முழுவதும் தொடர வேண்டி உள்ளது. அதற்காக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். இந்த போட்டியில் என்னுடன் சேர்ந்து பிரஷர் சூழ்நிலைகளிலும் மந்தீப் சிங் சிறப்பாக விளையாடினார். அவர் நன்றாக என்னுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது.

Gayle 1

மேலும் சுனில் நரேன் இதற்கு முன்னர் எனது என்னை பலமுறை ஆட்டமிழக்க வைத்திருக்கிறார். அவர் உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் இதுபோன்ற மைதானங்களில் அவருக்கு பெரிய டர்ன் கிடைக்காது. அதனால் அவரை அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதுவே இன்று நடந்தது. இதுபோன்ற பிட்சில் அவரால் நிச்சயம் என்னை வீழ்த்த முடியாது என்று தெரியும். அதனால் அவரது ஓவரையும் டார்கெட் செய்தேன் என்று கெயில் கூறினார்.

Advertisement