Chris Gayle : ஓய்வு முடிவினை திரும்ப பெற்ற கெயில். இந்த தொடரின்போதுதான் ஓய்வு பெறுவேன் – கெயில்

இந்த உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் பொழுது இந்த உலக கோப்பை தொடரின் முடிவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி இந்த உலகக் கோப்பை

chris-gayle
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் பொழுது இந்த உலக கோப்பை தொடரின் முடிவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி இந்த உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இடம்பெற்று ஆடி வருகிறார்.

gayle

இந்நிலையில் திடீரென அவர் தன் முடிவை மாற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கெயில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : எனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. உலகக் கோப்பை தொடருக்குப் பின் வரும் விளையாட இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் நிச்சயம் விளையாடுவேன்.

- Advertisement -

டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் டி20 தொடரில் விளையாடபோவது இல்லை. உலகக்கோப்பைக்கு பின் இதுதான் எனது திட்டம் என்றார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தைப் பொறுத்தவரை கெயிலுக்கு இந்திய அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி தொடர் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.

gayle

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்குப்பின் கெயில் அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுவார் என்று தெரியவந்துள்ளது. அதிரடி வீரரான தற்போது 39 வயதாகிறது மேலும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் மற்றும் டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுவார் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement