இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய – மே.இ நட்சத்திர வீரர்

Wi-3

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Saha-3

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கெயில் விலகியுள்ளார். இதுகுறித்து கெயில் கூறியதாவது : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர்களுடன் இணைந்து இந்திய அணிக்கு எதிராக விளையாட வைக்க விரும்பியது ஆனால் நான் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று இப்போது முடிவு செய்துள்ளேன். மேலும் இந்திய தொடர் மட்டுமின்றி பிக்பாஷ் டி20 தொடரிலும் நான் விளையாட மாட்டேன் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது என்று கூறினார்.

Gayle 1

ஏற்கனவே இந்திய அணி பலமாக உள்ளநிலையில் தற்போது அந்த அணியின் முக்கிய வீரரான கெயிலும் விலகியுள்ளதால் இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரையும் இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -