எந்த இடத்துல இறக்கி விட்டாலும் அடிச்சி நொறுக்க நான் தயார் – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த கெயில்

Gayle
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளுக்கான டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Wi-3

- Advertisement -

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் 41 வயதான கிரிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே வயது மூப்பின் காரணமாக அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட கெயில் கடைசியாக விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் தேசிய அணிக்காக அவர் விளையாட இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி உள்ள அவரது திறமையின் அடிப்படையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார்.

gayle 2

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இணைந்து விளையாடுவது குறித்து கெயில் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடினேன். என்னை மூன்றாவதாக விளையாட வைத்தது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேதான். அந்த அணியில் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து என்னுடைய அனுபவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாட வைத்தனர்.

Gayle

அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. நான் சுழல் பந்துவீச்சையும் சிறப்பாக விளையாடுவேன். வேகப்பந்து வீச்சையும் எதிராக எதிர்கொள்வேன். அதனால் என்னை எந்த இடத்தில் களம் இறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் இப்போதும் ஒரு சிறப்பான வீரராகவே இருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை நான் இன்னமும் பெஸ்ட் தான் என கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement