ஐ.பி.எல் போட்டியில் நான் இரட்டை சதத்தை மிஸ் பண்ணதுக்கு இவரே காரணம் – கெயில் அதிரடி பேட்டி

gayle
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. மேலும் இனி வரப்போகும் கிரிக்கெட்டிலும் ரசிகர்களில் உடன் நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது.

Gayle

இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள ஓய்வு நேரத்தை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடர் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது புனே அணிக்கு எதிராக 2013ஆம் ஆண்டு 175 ரன்கள் அடித்தார். ஐபிஎல் போட்டிகளில் ஒரு தனி பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்களாக இது பதிவாகியுள்ளது. அந்த போட்டியில் கெய்ல் வெறும் 66 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்களுடன் 175 ரன்களை குவித்தார்.

ChrisGayle

இந்நிலையில் அந்த போட்டியில் இரட்டை சதத்தை தவறவிட்டதற்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தி உள்ளார். அந்த சம்பவம் குறித்து கெயில் பேசுகையில் : எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டி தொடங்கிய இரண்டு ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. மழை வந்ததால் களத்தில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம்.

- Advertisement -

பிறகு ரவி ராம்பாலிடம் நான் 170-180 ரன்கள் அடித்தால் போதும் என்று சொன்னேன். ஆனால் அதன் பின்னர் நான் பேட்டிங் செய்யும்போது நல்ல ரிதத்திற்கு வந்தேன். சில நேரங்களில் நாம் களத்தில் நிலைத்து நின்று விட்டால் இனி மேல் நம்மை அவுட்டாகும் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றும். அதே போன்று அன்றைக்கு எனக்கான நாளாக அமைந்தது.

Gayle 1

கடைசியில் 175 ரன்களுடன் நான் இன்னிங்சை முடித்தேன். டிவில்லியர்ஸ் மட்டும் டெத் ஓவர்களில் இறங்கி அந்த காட்டடி அடிக்காவிட்டால் கடைசி வரை நான் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து இருப்பேன் என்று கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement