- Advertisement -
உலக கிரிக்கெட்

2 ஆவது போட்டியில் நம்பர் 45, இன்று 301 ஜெர்சியோடு களமிறங்கிய கெயில் – செம காரணம் தான்

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று சற்றுநேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக 45 ஆம் நம்பர் ஜெர்சியுடன் களமிறங்கி வந்த கெயில் இன்றைய கடைசி போட்டியில் 301 என்று நம்பர் பதிந்த ஜெர்ஸி உடன் களமிறங்கினார். அதன் பின்னனியில் உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் இன்று 301 என்ற நம்பர் ஜெர்சியுடன் களமிறங்க காரணம் யாதெனில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் கெயில் (301) சாதனை படைத்ததால் அதனை குறிப்பிடும் விதமாக இன்றைய போட்டியில் அவர் தனது தனது ஜெர்சியில் 301 நம்பருடன் களமிறங்கினார்.

- Advertisement -
Published by