Worldcup : உலகக்கோப்பை தொடரில் 39 வயதில் ஒரு அற்புதசாதனை படைத்த – கெயில்

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

chris-gayle
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

gayle

இந்த போட்டியில் கெயில் 34 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை அடித்தார். மேலும், இந்த போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களோடு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரரான டிவில்லியர்ஸ்-ன் சாதனையை முறியடித்தார். இதுவரை உலகக்கோப்பை தொடரில் 27 போட்டிகளில் ஆடியுள்ள கெயில் 40 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement